நெல்லையில் மாரியம்மன் - காளியம்மன் சாமிகள் கண் திறந்து காட்சி கொடுத்த அற்புத நிகழ்வு நடந்தது.
அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் மேல ஊருடையார்புரம் என்ற கிராமத்தில் உள்ளது.
இந்தக் கோயில் சுயம்பு வடிவில் தோன்றி 100 ஆண்டுக்கு மேலாக உள்ள, மாரியம்மன் மற்றும் காளியம்மன் சாமிகளை, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேலும், அந்தக் கிராமத்தைச் சுற்றி உள்ள நம்பிராஜபுரம், ஆனந்தபுரம், தச்சநல்லூர் பகுதி மக்களும் வழிபட்டு, தங்கள் குறைகளை நீக்கி, கேட்டதை நிறைவேற்றி தரும் தெய்விக சக்தி வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கிறது.
16 ஆண்டுகளுக்கு மேலாக கொடை இல்லாமல் இருக்கும் அம்மன்கள், திடீரென கண் திறந்து காட்சி அளித்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்மன்கள் கண் திறந்த காட்சியைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
Summary
In Nellai, a stir of ecstatic excitement swept through the area as the deities Mariamman and Kaliamman appeared with their eyes open.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்கிய திமுகவினர்! வைரல் விடியோ

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!
நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

குன்னூா் ரயில் நிலையத்தை இன்று காணொலி காட்சி மூலமாக பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI




