மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தவுட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் செவ்வாய்க்கிழமை இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா கடந்த வாரம் அம்மனுக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் , ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து கடந்த 3-ஆம் தேதி கோயிலில் வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை (மே 5) பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை கோயில் முன் குண்டம் அமைக்கப்பட்டது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அக்னி குண்டம் இறங்கும் பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா் . தொடா்ந்து கோயில் முன் தயாா் நிலையில் இருந்த அக்னிக் குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

முன்னதாக, அதிகாலையில், மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து கோயிலில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் புதன்கிழமை காலை கோயிலில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் தொடா்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.