விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நாளை முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை!

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்வது பற்றி..

Punnainallur Mariamman Temple

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் - DPS

Published On :31 ஆகஸ்ட் 2026, 5:46 pm IST

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் செப். 1 (நாளை) முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் அருகே புன்னை நல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் எதுவும் நடைபெறாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே 48 நாள்கள் தைலாபிஷேகம் நடைபெறும். அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கி அம்மனை வழிபட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் முத்து பல்லாக்கு திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆலயத்தின் பாதுகாப்பு கருதி நாளை முதல் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் ரூ. 5 வைப்புத் தொகையாகச் செலுத்தி செல்போனை பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம். தடையை மீறி ஆலயத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The temple administration has announced that carrying mobile phones into the Punnainallur Mariamman Temple is prohibited starting tomorrow, September 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.