முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை! "பஹந்தி" சடங்கு தொடக்கம்!

ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது பற்றி..

News image

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை - PTI

Updated On :16 ஜூலை 2026, 12:05 pm IST

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஆஷாட மாதத்தின் முதல் நாளில் 149-வது ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நடைபெற்ற மங்கள ஆரத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, மிகுந்த பக்தியுடன் வழிபாடு நடத்தினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியும் பங்கேற்றார்.

ஒடிஸா மாநிலத்தில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். நிகழாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை மிகவும் விமரிசையாகத் தொடங்கிய நிலையில், ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது.

பஹந்தி சடங்கிற்கு முன், 'மங்கள ஆரத்தி' மற்றும் 'மைலம்' போன்ற பல வழக்கமான சடங்குகள் நடத்தப்பட்டு, கோயிலின் கருவறையிலிருந்து தெய்வ சிலைகளை வெளியே கொண்டுவரப்படும்.

பஹந்தி சடங்கு மூன்று மணி நேரம் நடைபெறும். பஹந்தியில் மும்மூர்த்திகளான பாலபத்திரர், தேவி சுபத்ரா மற்றும் ஜெகந்நாதர் ஆகியோர் கோயில் சன்னதியிலிருந்து சுமார் 2.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ குண்டிசா கோயிலுக்குச் செல்வதற்காக சிங்க வாயிலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ள அந்தந்த ரதங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மக்களின் கோஷங்கள் மத்தியில், சங்குகளும், மேள தாளங்கள் முழங்க சக்ரராஜ சுதர்னம் முதலில் பிரதான கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்படும்.

Story image

-

ஸ்ரீ சுதர்சனம் என்பது புரியில் ஜெகந்நாதர் வடிவில் வணங்கப்படும் பகவான் விஷ்ணுவின் சக்கர ஆயுதம் ஆகும். ஸ்ரீ சுதர்சனத்தைத் தொடர்ந்து ஜெகந்நாதரின் மூத்த சகோதரர் பாலபத்ரர் சிலை கொண்டுவரப்படுவர். பாலபத்ரர் "தலத்வஜ" தேரில் அமர்த்தப்படுவார்.

ஜெகந்நாதர் மற்றும் பாலபத்ரரின் சகோதரியான சுபத்ரா தேவி "சூன்ய பஹந்தி" என்ற சிறப்பு ஊர்வலத்தில் "தர்பதாலன்" தேருக்கு அழைத்து வரப்படுவார்.

இறுதியாக ஜெகந்நாதர் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, ​​பக்தர்கள் 'ஜெய் ஜெகந்நாதர்' என்று கைகளை உயர்த்தி பலத்த கரகோஷத்துடன் கிராண்ட் ரோடு வழியாகக் கொண்டு வரப்படும்.

தேர்களில் திருவுருவங்கள் அமர்த்தப்பட்ட பிறகு, ரத யாத்திரையின் மிக முக்கியமான இரண்டு சடங்குகள் நடைபெறும்.

கோவர்தன பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதி, தனது சீடர்களுடன் மூன்று தேர்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்து சிறப்புப் பூஜைகளை மேற்கொள்வார்.

இறைவனின் முன்னால் பணிவு மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக, புரியின் மன்னரான கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ், 'சேரா பஹன்ரா' (தேர்களைச் சுத்தம் செய்யும் சடங்கு) நிகழ்வை நிறைவேற்ற அரச பல்லக்கில் வருவார்.

கஜபதி மகாராஜா தங்கப்பிடி கொண்ட துடைப்பத்தால் மூன்று தேர்களின் மேடைகளையும் சுத்தம் செய்து, நறுமணம் கமழும் புனித நீரைத் தெளிப்பார்.

அரச சடங்குகள் நிறைவடைந்த பின்னரும், தேர்களில் மரத்தாலான குதிரைகள் பொருத்தப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் பக்தர்களால் தேரிழுக்கும் பிரம்மாண்ட நிகழ்வு தொடங்கும்.

ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண ஸ்ரீ குண்டிசா கோயிலில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.

வழிநெடுகிலும் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல குழுக்கள் ரதயாத்திரைக்கு வருகை தந்துள்ளனர்.

The holy town of Puri is witnessing immense spiritual fervour on Thursday as the world-famous Rath Yatra of Lord Jagannath begins.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.