கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா விமர்சையாக நடைபெற்றது.

News image

முத்துப் பந்தல் விழா - video crop

Updated On :15 ஜூன் 2026, 3:38 pm IST

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. துர்க்கை அம்மன் தனி சன்னதியில் காட்சி தரும் இந்த கோயில் ஆண்டுதோறும் முத்துப்பந்தல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 13 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில், திருஞான சம்பந்தருக்கு, சுவாமி - அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் வழங்கி முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று முத்து பந்தல் புறப்பாடு விழா நடைபெற்றது முன்னதாக விசேஷ அலங்காரத்தில் திருஞானசம்பந்தர் கோயிலில் இருந்து புறப்பட்டு முத்து பந்தலில் எழுந்தருள நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை தோளில் சுமந்து வீதி உலா சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The 'Muthu Panthal' (Pearl Canopy) festival of Thirugnanasambandar was celebrated in a grand manner at the Thenupureeswarar Temple in Patteeswaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.