
ஆவணி மாத அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
சதுரகிரியில் திரளான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தது பற்றி..

அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்காக மலையேறிச் சென்ற பக்தா்கள்
சதுரகிரியில் ஆவணி அமாவாசையான இன்று திரளான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு செப். 8 முதல் 11 வரை மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையின் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, செப். 8 பிரதோஷ நாளான செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 2-ஆவது நாளான புதன்கிழமை சிவராத்திரியையொட்டி, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை நுழைவு வாயில் முன் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். தாணிப்பாறை, வாழைத்தோப்பு பாதை வழியாக நண்பகல் 12 மணி வரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்றனர்.
ஒவ்வொரு மாதமும், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தில் எட்டு நாள்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 சித்தர்கள் வாழ்ந்த இடமாகக் கருதப்படும் சதுரகிரியில் இரவு தங்கவும், நெகிழி பொருள்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமாகா லிங்கத்தைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





