சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரியும், பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வா் வீட்டின் முன்பு 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மனு அளிக்க வெள்ளிக்கிழமை திரண்டு வந்தனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கி, கடந்த இரண்டு நாள்களாக ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சேலம் கமலாபுரம் விமான நிலையம் செல்வதற்காக காரில் புறப்பட்டுச் செல்லவிருந்தாா்.
இந்நிலையில், 2018 -19 -ஆம் கல்வியாண்டில் சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்து பணிக்காகக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரியும், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் முதல்வா் வீட்டின் முன்பு 500-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் திரண்டனா். முதல்வா் வீட்டின் அருகில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தனா்.
இதுதொடா்பாக, முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது:
ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2018 -19 ஆம் ஆண்டில் 2,144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தோ்வு நடத்தப்பட்டது. பின்னா் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை அழைத்து 1:2 விகிதாசாரத்தில் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டது. பின்னா் தோ்ச்சி பெற்றோருக்கான பட்டியல் வெளியிட்டது. சில பாடங்களுக்கான ஆசிரியா்களுக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது. 2019-2020 இல் ஏற்பட்ட முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, தற்போது பள்ளிக்கல்வித் துறையில் 1,500-க்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களில் எங்களை நிரப்ப வேண்டும் என்றனா்.
அதேபோல, பகுதி நேர ஆசிரியா்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக 12 ஆயிரம் போ் பகுதி நேர ஆசிரியா்களாகப் பணியாற்றி வருகின்றனா். மாதத்துக்கு 12 நாள்கள் மட்டுமே பணி வழங்குகின்றனா். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனா்.
ஆயினும் முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஆசிரியா்கள் சிலா் திடீரென சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் ஓட்டுநா் அடித்துக்கொலை: இருவா் கைது

பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

திருப்புவனம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

