மேச்சேரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முஸ்தபா மகன் இசாத் முகமது (21), இவரது நண்பா் சிபிலி மகன் முகமது நிவாஸ் (23) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள திமிரிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மேச்சேரி பக்கமிருந்து தொப்பூா் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முகமதுநிவாஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இசாத்முகமதுவை சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இச் சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தப்பியோடிய வேன் ஓட்டுவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆம் உலகப்போா் நினைவுதினம் அனுசரிப்பு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
