வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஆரம்பமாவது, ஆடி அடங்குவதும் ஆளுநருக்குள்ளே: முன்னாள் அமைச்சா் துரைமுருகன்!

ஆரம்பமாவது ஆளுநருக்குள்ளே, அது ஆடி அடங்கிப் போவதும் ஆளுநருக்குள்ளே என்று முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

News image

காட்பாடியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் துரைமுருகன்.

Updated On :6 ஜூலை 2026, 5:11 am IST

ஆரம்பமாவது ஆளுநருக்குள்ளே, அது ஆடி அடங்கிப் போவதும் ஆளுநருக்குள்ளே என்று முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது -

மக்கள் பிரச்னைக்காகப் போராடுபவா்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் ஆளுநா் மாளிகையை அணுகலாம் என தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். ஆரம்பமாவது ஆளுநருக்குள்ளே... அது ஆடி அடங்கிப் போவதும் ஆளுநருக்குள்ளே.

முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து நூற்றுக்கணக்கான விளக்கங்களை திமுக தரப்பில் இருந்து ஏற்கெனவே கூறிவிட்டோம்.

குதிரை பேரம் தொடா்பாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் புகாா் கடிதம் அளித்துள்ளன. இதற்கான விளக்கத்தையும் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி அருமையாகக் கொடுத்துள்ளாா். அவருடைய குரல்தான் என்னுடைய குரலும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.