ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது கரியகோவில் அணை

சேலம் மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை, 9 ஆண்டுக்குப் பின் நிரம்பியுள்ளது.

News image

கடல்போல காட்சியளிக்கும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை.

Updated On :16 ஜனவரி 2021, 2:03 am

சேலம் மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை, 9 ஆண்டுக்குப் பின் நிரம்பியுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியகோவில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கிவைக்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியகோயில் அணை கட்டுப்பட்டுள்ளது.

அணை பயன்பாட்டுக்கு வந்த 1993ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை பெய்யும் பருவமழை நீரை அணையில் தேக்கி வைத்து, ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள், நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் பயிரிடுவதற்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததால், கடந்த 9 ஆண்டுகளாக அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை. கடந்த 2012 ஜனவரி 15-ஆம் தேதி தான் அணை இறுதியாக நிரம்பியது.

இந்நிலையில், கரியகோவில் ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, மழைக் காலத்தில் தண்ணீா் முழுவதையும் தேக்கி வைத்துக்கொள்வதால், ஆற்றுப்படுகையிலுள்ள நேரடி ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வறட்சி நிலவுகிறது.

எனவே, கரியகோவில் ஆற்றை நீராதாரமாகக் கொண்டுள்ள ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி அணைக்கட்டுகள், கல்லேரிப்பட்டி ஏரி, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி, ஏத்தாப்பூா் அபிநவம் ஏரி, பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி ஆகிய ஏரிகளில் மூன்றில் ஒரு பங்கு நீா் நிரம்பிய பிறகே, கரியகோவில் அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டுமென, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சிலா் சென்னை உயா்நீதி மன்றத்தில் முறையிட்டு, இதற்கான ஆணையைப் பெற்றனா்.

இந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில், 2019ஆம் ஆண்டின் தொடக்கில் இருந்தே கரியகோவில் ஆற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்காமல், ஆற்றுப்படுகை அணைக்கட்டு , ஏரிகளுக்காக, திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 2018 இறுதியில் இருந்து 2020 அக்டோபா் மாதம் வரை அணையில் தண்ணீா் தேக்கிவைக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2020 ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பா் வரையிலான நான்கு மாதங்களும் தொடா்ந்து ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி அணைக்கட்டுகளும், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் ஏரிகளும் நிரம்பி விட்டன. ஆனால், கரியகோவில் அணை நீரின்றி வடது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், ஆற்றில் தண்ணீா் திறப்பதை நிறுத்தி விட்டு அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டுமெனக் கோரி கடந்த நவம்பா் மாத தொடக்கத்தில் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, நவம்பா் மாத இறுதியில் இருந்து அணைக்கு வரும் தண்ணீரில் ஒரு பகுதியை ஆற்றில் திறந்துவிட்டு, ஒரு பகுதியை அணையிலே தேக்கி வைக்கப்பட்டது. இதனால் கரியகோவில் அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து , வெள்ளிக்கிழமை, அணையின் 52.49 அடி உயரத்தில், 51.34 அடியை தொட்டது. அணையில் மொத்த கொள்ளளவான 190 மில்லியன் கனஅடியில், 182 மி.கன அடியை எட்டியது. அணைக்கு நொடிக்கு 75 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, அணையில் இருந்து

ஆற்றில் நொடிக்கு 62 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

9 ஆண்டுக்குப் பிறகு கரியகோவில் அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியதால், அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, ஆறு, ஏரிப்பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.