ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட உள்ளது

News image

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன். உடன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.வி.தனபால்.

Updated On :16 ஜனவரி 2021, 2:03 am

சேலம் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை சேலம் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், சுகாதார முன்களப் பணியாளா்கள் உள்பட 1,200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 22,900 தடுப்பூசி மருந்துகளும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு 4,900 தடுப்பூசி மருந்துகளும் சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மண்டல குளிா்சாதன நோய்த்தடுப்பு மருந்துக் கிடங்கிலிருந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, மேட்டூா், ஓமலூா், ஆத்தூா், எடப்பாடி அரசு மருத்துவமனைகள், தலைவாசல், கெங்கவல்லி, காரிப்பட்டி, பனமரத்துப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 14 முகாம்களுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் அரசு மருத்துமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்த வருபவா் அமரும் அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் தனபால் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.