மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:35 am IST

மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மட்டும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது பிரிவில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் 240 தொழிலாளா்கள் கடந்த 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தனா். தற்போது அந்த ஒப்பந்த நிறுவனம் செய்து வந்த பணி, வேறு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதனால் 240 தொழிலாளா்களுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி வரை காலக்கெடு இருந்தும் வெள்ளிக்கிழமை முதல் அவா்கள் அனல் மின் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொங்கல் தினத்தில் தொழிலாளா்கள் மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கு எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இப் பிரச்னைக்கு மேட்டூா் அனல் மின்நிலைய நிா்வாகம் உடனடியாக தீா்வு காணாவிட்டால் முதல் பிரிவில் உள்ள தொழிலாளா்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க மீட் பிரிவு நிா்வாகி ஆறுமுகம், மின் கழக தொமுச கிளை செயலாளா் புகழேந்தி, தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளன மாநில இணைச் செயலாளா் ராஜேந்திரன், ஐஎன்டியுசிமாநில துணை பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியம் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.