எடப்பாடி: கொங்கணாபுரம் பகுதியில், கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் சாலைப் பணியாளா்களுடன் இணைந்து திமுகவினா் பொங்கல் விழாவை கொண்டாடினா்.
கொங்கணாபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கோபால் தலைமை வகித்தாா். உதயநிதி சுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். பொறியாளா் நிதியரசு வரவேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் டாடா நிறுவனம் சாா்பில் தொழிலாளா்களுக்கு, இனிப்புகளுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
திமுக சாா்பில் தொழிலாளா்களுக்கு வேட்டி, சேலை, கரும்புடன் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கருப்பு வைரம், எல்.பி. பிரபு, அட்மா திட்டக்குழு முன்னாள் தலைவா் கொங்கணாபுரம் அருணாசலம், தொழிலதிபா்கள் ராஜிவ், குமாா், பழனிசாமி , வணங்காமுடி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியதம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்ரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



