
இந்திய உளவுத் துறையானது உலகலாவிய உளவு அமைப்புகளில் மிகப் பழமையானது. ஆரம்பத்தில் இந்த அமைப்பு தற்போதுள்ள உளவு விசயங்களில் இல்லாமல், உள்நாட்டு பாதுகாப்பிலேயே கவனம் செலுத்தியது. 1885 ஆம் ஆண்டு மேஜர் கெனெரல் சார்லஸ் மெக் க்ரீகர் (Charles MacGregor) முதல் இயக்குனராக பிரிட்டீஷ் படை உளவு அமைப்பில் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய படைகளைப் பற்றிய உளவு காணும் பணியைச் செய்தது. 1909 இல் அரசியல் உளவு அமைப்பு இங்கிலாந்தில் அமைக்கப்பட்டு பின்னர் இந்திய அரசியல் உளவுத்துறையாக (Indian Political Intelligence (IPI) 1921 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

அலுவல் காரணமாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றினாலும், இதற்கெனெ தனி இயக்குனர் (Director IB) உள்ளார். இவர் கூட்டு உளவுக் குழு (Joint Intelligence Committee) மற்றும் இயக்கக் குழு (Steering Committee) ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். மேலும், பிரதம அமைச்சருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கவும் அதிகாரம் உள்ளது.
மற்ற உளவு அமைப்புகள் போலன்றி உளவுத்துறையிலும் மாநிலங்கள் மற்றும் தேசிய வாரியான செயல்பாடுகள் வித்தியாசமானது. பயங்கரவாதம் மற்றும் பதில் உளவு (counter-intelligence) போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. ராஜீவ் ஜெயின்(Rajiv Jain) தற்பொழுது இயக்குனராக பணியாற்றுகிறார்.
பல ஆண்டுகளாக இந்தியா ஊழல் மற்றும் குற்றத்தினால் பெரும்பாதிப்பிற்குள்ளானது. மாநிலங்களுக்கிடையே, பிற நாட்டுத் தொடர்புகளினால், குழந்தைகளை பாலியல் துண்புறுத்துதலுக்கு ஆளாக்குவது, கொத்தடிமைகள், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுதல், போன்றவை மாநிலங்களுக்கிடையேயும், நாடுகளுக்கிடையேயும் இக்குற்றங்கள் நடைபெறுகின்றன.
அதன் படி உள்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஊழலற்ற, குற்றங்களற்ற சமுதாயத்தை உருவாக்கும் நிகழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஊழல், குற்றங்கள், போலி ரூபாய் நோட்டுகள், போதை பொருள்கடத்தல், வன உயிர்கள் பாதுகாப்பு, சட்டத்திற்கெதிரான தபால்தலை / தபால், ஆயுதங்கள், மனித உரிமை பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அனைத்து சட்டவிரோத செயல்கள் மீது உடனடி மற்றும் அவசர விசாரணை மேற்கொள்ளும். இதன் அமைப்பு நாடு முழுதும் பரந்து விரிந்து பல அமைப்புகள், இயக்கங்களின் மூலம் செயல்படுகிறது.
கவனம் செலுத்தும் பகுதிகள் (Focus Areas )
- திறமையான குற்றம் மற்றும் ஊழல் கட்டுப்பாடு,
- ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்,
- அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தும் ஊழல் நிறைந்த கூறுகளை கண்காணித்து தடுத்தல்
- உளவுத்துறை சேகரித்தல். அதிகாரங்களை தவறாக பயன்படுத்துதல், ஊழல் அதிகாரிகளின் குற்ற நடத்தை மற்றும் அசாதாரண சொத்துக் குவிப்பு
- ஊழல் தொடர்பான குற்றங்களைத் தடுத்தல் & கண்டறிதல்.
துறையின் மண்டலங்கள்...
- கிழக்கு மண்டலம்
- மேற்கு வங்காளம் (ZONAL H.Q-KOLKATA)
- சிக்கிம்
- மணிப்பூர்
- மேகாலயா
- நாகாலாந்து
- திரிபுரா
- அசாம் மாநிலம்
மேற்கு மண்டலம்
- மகாராஷ்டிரா (ஜோனல் எச்.எம்-மும்பை)
- இராஜஸ்தான்
- குஜ்ராத்
- கோவாவில்
- தமன் & தியூ
- ஆண்ட்ரா ப்ரதீஷ்
மத்திய மண்டலம்
- புது டெல்லி எச்.சி. (தேசிய)
- உத்திரப் பிரதேசம் (ZONAL H.Q-LUCKNOW)
- பிஹார்
- ஜார்கண்ட்
- சட்டீஷ்கர்
- ஒடிசா
தெற்கு மண்டலம் (SOUTHERN COMMAND)
- கர்நாடகா
- கேரளா
- தமிழ்நாடு
- தெலுங்கான
- சென்னை
வடக்கு மண்டலம் (NORTHERN COMMAND)
- சண்டிகர் (ZONAL H.Q)
- பஞ்சாப்
- ஹரியானா
- உத்தரகண்ட்
தலைமையிடம்:
National Intelligence Bureau
Intelligence Bureau, 35 Sardar Patel Marg,
Chanakyapuri ,
New Delhi 110022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...