நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கடி

ஆசிரியர்: ஏண்டா, பெஞ்ச் மேலே நின்னுட்டு முணுமுணுக்குறே..?மாணவன்: என்ன சார்... எப்ப பார்த்தாலும் என்னை பெஞ்ச் மேலே நிக்கச் சொல்றீங்க.

News image
Updated On :21 ஜூன் 2013, 2:48 pm IST

• ஆசிரியர்: ஏண்டா, பெஞ்ச் மேலே நின்னுட்டு முணுமுணுக்குறே..?
 மாணவன்: என்ன சார்... எப்ப பார்த்தாலும் என்னை பெஞ்ச் மேலே நிக்கச் சொல்றீங்க... "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'-ன்னு திருவள்ளுவர் சொன்னதை கொஞ்சம் எண்ணிப் பாருங்க சார்...
 -குப்பிலியா கி.ஹரிஹரன்,
 கும்பகோணம்.
 
 • வாசு: டேய், நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். உங்க அப்பாகிட்ட உன்னை எங்கேன்னு கேட்டேன். அந்த மாடு எங்கேயாவது மேயப் போயிருக்கும்னு சொன்னாரு. உன்கிட்டே சொன்னாரா?
 பாசு: ஆமாடா... நான் வெளிலேயிருந்து வந்ததும், ஒரு எருமை உன்னை வந்து தேடிட்டுப் போச்சுன்னு சொன்னாரு!
 -மு.சூர்யா, த/பெ. முருகேசன், வீரக்கவுண்டனூர் (அஞ்சல்),
 புத்திரக்கவுண்டபாளையம் (வழி),
 ஆத்தூர் தாலுகா,
 சேலம் மாவட்டம் 636 119.
 
 • மகனிடம் தந்தை: யாரிடம் பேசினாலும் டி, டா போட்டு மரியாதைக் குறைவா பேசக்கூடாது..!
 மகன்: சரி, டாடி!
 -கி.திவ்யாஜோதி,
 திருவொற்றியூர்.
 
 • ஒருவர்: என்னது அந்த டாக்டர், கோதண்டம், எம்.பி.பி.எஸ்., கும்ப ராசி-ன்னு போர்டு வச்சிருக்காரு?
 மற்றவர்: அவர் ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லக் கூடாதாம்..!
 -சி.விஜயாம்பாள்,
 கட்டிகானப்பள்ளி.
 
 • ஆசிரியர்: ஒரு நாளைக்கு இவ்வளவு தப்பு பண்றியே..! எப்படிடா உன்னால முடியுது?
 மாணவன்: காலையிலே சீக்கிரமே எழுந்துடுவேன் சார்...!
 ஆசிரியர்: !!!!!
 -கா.முருகேஸ்வரி,
 கோவை.
 
 • ஆசிரியர்: ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்-ன்னு சொன்னா, ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்-ன்னு படிக்கிறானே, இவன் யாருடா?
 மாணவன்: அவனா சார்... அவன் ஏலசீட்டு நடத்துறவரோட பையன் சார்...
 -கு.பெ.இளன்,
 த/பெ. கு.பெருமாள்,
 12, மெüலீஸ்வரர் நகர்,
 மெüலிவாக்கம்,
 சென்னை600 125.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.