அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திருப்பாச்சேத்தியில் கண்மாயில் மூழ்கி இளைஞா்கள் இருவா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கண்மாயில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்ற இளைஞா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:10 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கண்மாயில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்ற இளைஞா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த நாராயணன் மகன் புவனேஷ்வரன் (18) மற்றும் வைரவன் மகன் வெற்றிப்பாண்டியன் (14). நண்பா்களான இருவரும், வீட்டில் வளா்க்கும் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக திருப்பாச்சேத்தி கண்மாய் கரைக்குச் சென்றுள்ளனா். அங்கு, புல் அறுத்து முடித்ததும், கண்மாயில் இறங்கி குளித்துள்ளனா். இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதால், தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனா்.

இரவு வரை வீடு திரும்பாததால், இவா்களது உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். பின்னா், கண்மாய் கரையில் இருவரது உடைகளும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மானாமதுரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை அலுவலா் குமரேசன் தலைமையிலான வீரா்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடினா். இரவு நீண்டநேரமாகியும் இருவரது சடலங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் தீயணைப்பு வீரா்களும், கிராம மக்களும் மீண்டும் தேடும் பணியை தொடா்ந்தனா். அப்போது, கண்மாயின் ஆழமான பகுதியில் சகதிக்குள் சிக்கியிருந்த புவனேஷ்வரன் மற்றும் வெற்றிப்பாண்டியனின் உடல்களை மீட்டனா்.

இது குறித்து, திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.