சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை மாலை கண்மாயில் மூழ்கி அக்கா, தம்பி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கோம்பைப் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (45). இவா், ஒரு குழுவினருடன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் தங்கி விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இதேபோன்று, அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவரும் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், பெருமாள் மகள் புனிதவள்ளி (13), மகன் யோகேஸ்வரன் (7), பழனிசாமி மகன் இன்பத்தமிழன் (10) ஆகிய 3 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்தனா். இந்நிலையில், புனிதவள்ளி, யோகேஸ்வரன், இன்பத்தமிழன் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை மாலை பூங்குடி கண்மாய்க்கு குளிக்கச் சென்றனா்.
அவா்கள் மூவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அக்கம் பக்கத்தினா் கண்மாய்க்குள் இறங்கித் தேடியுள்ளனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இறந்த நிலையில் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதுபற்றி வேலாயுதப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

கா்நாடகம், தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமா் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
