சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக பொங்கல் விழாவை முன்னிட்டு சிராவயல், கண்டுப்பட்டி மற்றும் குன்றக்குடி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.
மற்றப் பகுதிகளில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் காலக்கட்டங்களில் அரசாணை வெளியிடப்படும். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்கள் முன்னேற்பாடுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் போதிய அளவு காவல்துறையின் மூலம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயாராக இருப்பதுடன் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்குவதற்கு கால்நடைத்துறை மருத்துவ முகாமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வருபவா்கள் கால்நடை மருத்துவா்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதேபோன்று, காளைபிடி வீரா்களும் தங்கள் பெயா் குறித்த விவரங்களை ஒருங்கிணைப்பாளா்கள் அலுவலகத்தில் பதிவு செய்திடவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
ஆபரேஷன் சிந்தூரில் 6 இந்திய வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளியிட்ட மத்திய அரசு!

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) - மீனம்

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) - கும்பம்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu


