ஆபரேஷன் சிந்தூரின்போது வீரமரணம் அடைந்த 6 ராணுவ வீரர்களின் பெயர்களை ஓராண்டு கழித்து முதல்முறையாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு (2025) ஏப். 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் ஒன்றுமறியா சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதி நள்ளிரவில், இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து நடத்திய அதிதுல்லிய தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இதற்குப் பதிலடியாக பூஞ்ச், ரஜோரி, குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் உள்ளிட்ட எல்லையோர இந்திய கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடத்தினர். இதில், 11 இந்திய மக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள நூர்கான் மற்றும் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் உள்ளிட்ட முக்கியத் தளங்கள் மீதும் இந்திய ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின. கடுமையான சண்டைக்குப் பின்னர், 2 நாள்கள் கழித்து மே 9 அன்று மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் மட்டுமே பலியானதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 6 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், கடந்தாண்டு நான்கு நாள்கள் நடந்த கடுமையான மோதல் ராணுவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், இதுவரை மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகமலிருந்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும், அவர்களின் பெயர்களையும் முதல்முறையாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னமான தியாகச் சக்கரத்திலும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய நாடுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரர்களின் பெயர்களுடன் அவர்களின் பெயர்களும் இடம்பெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வீரமரணமடைந்தோர்
சுபேந்தர் மேஜர் பவண்குமார் (இந்திய ராணுவம் - 10வது காலாட்படை படைப்பிரிவு தலைமையகம்)
சுனில் குமார், வீர் சக்ரா விருது பெற்றவர் (இந்திய ராணுவம் -ஜம்மு - காஷ்மீர் 4-வது பட்டாலியன் லைட் இன்பேன்ட்ரி-)
லான்ஸ் நாயக் தினேஷ் குமார் (இந்திய ராணுவம் - 5வது பீல்டு ரெஜிமென்ட்)
மூத் முரளிநாயக் (இந்திய ராணுவம் - 851 லைட் ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த ஏவியேஷன் டெக்னீஷியன்)
ஹவில்தார் சுனில் குமார் சிங் (இந்திய ராணுவம் - 237 பீல்டு ஒர்க்ஷாப் கம்பெனி)
சர்ஜென்ட் சுரேந்திர குமார், வாயு சேனை பதக்கம் (இந்திய விமானப்படை - 39 விங்)
Summary
The names of the six personnel have been added to the Roll of Honour on the National War Memorial website and inscribed on Wall 3D at the memorial in New Delhi, where they will stand alongside those of thousands of soldiers who made the supreme sacrifice in service of the nation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய விஜய்! பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் திடீர் மாற்றம்!!
அமெரிக்க, இந்திய தடையற்ற ஒப்பந்தத்துக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஆா்பாட்டம்: நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் பங்கேற்பு

எந்தக் கூட்டணியிலும் இந்திய கம்யூ. இல்லை: மு. வீரபாண்டியன்
மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு! நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியது என்னென்ன?
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu


