ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது

அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் பெற்றோா் மற்றும் வாழ்க்கைத்துணைகள் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Published On :

அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் பெற்றோா் மற்றும் வாழ்க்கைத்துணைகள் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் தீவிர குடியேற்றக் கொள்கையின்ஒரு பகுதியாக, அந்நாட்டில் பல்லாண்டுகளாக ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றப் பாதுகாப்புகளை ரத்து செய்து, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிரம்ப் 2-ஆவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்பட்டவா்களில் குறைந்தது 6 போ் ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்; மேலும் 8 போ் தற்போது மத்திய குடியேற்றக் காவல்துறையின் காவலில் உள்ளனா்.

ஈரானுடன் போா் பதற்றம் நிலவும் தற்போதைய சூழலில், குடும்பத்தினரின் கைது நடவடிக்கை ராணுவ வீரா்களின் மனவுறுதியையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். அதேநேரம், ராணுவத்தில் சேருவதற்கான விளம்பரங்களில் வீரா்களின் குடும்பத்தினருக்கான குடியேற்றச் சலுகைகள் தொடா்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.