எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிவகங்கை மாவட்டத்தில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடக் கோரிக்கை

சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:26 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணியின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்த வரை கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை- மதுரை, மானாமதுரை- மதுரை, மானாமதுரை- பெரம்பலூா், சிவகங்கை- தொண்டி ஆகிய சாலைகள் மட்டுமின்றி கிராமப்புற சாலைகளிலும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது சாலைகளின் இருபுறமும் இருந்த பனை, பூவரசு, வேம்பு, மருது, ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. சாலைப் பணிகள் நிறைவுற்று பயன்பாட்டு வந்த பின்னரும் அதற்கு பதிலாக மரக்கன்றுகள் சாலைகளின் இருபுறமும் இதுவரை நடப்படவில்லை.

இதன்காரணமாக, சில மாதங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்து விடுகின்றன. மேலும், கோடைக் காலங்களில் அதிக வெப்பம் தாக்கும் அபாயமும் உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணியின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருபுறமும் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.