சமூகத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குவது ஊடகம். இது வெறும் நிகழ்வுகளை மட்டும் அறிவிப்பதில்லை, மாறாக பொதுவான கருத்தினை உருவாக்குகிறது. இதுவே ஊடகத்தை ஜனநாயகத்தில் ஒரு அதிகாரம் உள்ள ஒன்றாக ஆக்கியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கே அதனைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. சில நாடுகளில் மிகுந்த சக்தி வாய்ந்த ஊடகம் வாயிலாக - மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஒரு குறிப்பிட்ட வழியில் காட்டுவதன் மூலம், தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் கூட அண்மையில் ஊடகத்தின் முக்கியமானவர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக ஊடகம் தோன்றியவுடன் முன்பிருந்த ஊடகம் வெகுவாக மாறியது. சமூக ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு எங்கும் கண்களும் காதுகளும் ஏற்பட்டு உள்ளன. தொலைக்காட்சியின் சில சானல்களில் புகைப்படக் குழுவின் தகவல்களுடன், அவர்கள் நின்று விடவில்லை. எளிதில் போதனைகளாக ஏற்றுக்கொள்ள முடியாத , பொதுமக்களின் அபிப்ராயங்களை காட்டவல்ல மாபெரும் மேடையாக சமூக ஊடகம் மாறி உள்ளது. சமூகத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்க வல்லதாக உள்ளது. பண்டைய சிறப்பு வாய்ந்த ஊடகத் தொலைக்காட்சித் தடங்கள் கூட தற்போதைய சமூக ஊடகங்களின் பால் கவனமாக உள்ளது.
சமீப காலமாக சமூக ஊடகம் வாயிலாக பல மேம்பட்ட கதைகள் வருவதை நாம் பார்த்தோம்.சமூகம் சம்பந்தமான முக்கிய பிரச்னைகளை வெளிக்காட்டுவது மட்டுமின்றி அரசாங்கத்திற்கும், பிரஜைகளுக்கும் இடையேயான தொடர்பின்மையையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.
நம் தலைவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது பற்றி நன்கு அறிந்தவர்களாக ஜனங்கள் இருக்கிறார்கள், மேலும் சட்டங்களும், செயல் திட்டங்களும் எவ்வாறு தம்மைப் பாதிக்கக்கூடிய வகையில் இயற்றப்பட்டு உள்ளன ,என்பது பற்றியும் ஜனங்கள் தம்முள் பகிர்கிறார்கள். மூடிய கதவுகளுக்குப் பின்னால் பல மாதங்கள் வரையில் பிரஜைகள் அறியா வகையில் அரசாங்கம் சட்ட திட்டங்களை வெளிக் கொண்டு வரும் நாட்களின்று இல்லை. சமூக ஊடகத்திற்கு நன்றி,அரசியல் சம்பந்தமான பிரச்னைகள், கருத்துக்கள் யாவற்றையும் பற்றிய விவாதங்கள், பரவலாகவும்,உடனுக்குடன் இடம் பெறுவதாகவும் உள்ளது.
சில அரசியல்வாதிகள், ஜனசமூகத்திநிடையே பிரிவுகளை உண்டாக்கி அவர்களது அபிப்ராயங்களுடன் விளையாடுவதன் மூலம் வோட்டுகளைப் பெற முயற்சிக்கிறார்கள்.மக்களிடையே உள்ள பிரிவுகள், சமூக ஊடகம் வாயிலாக மறைந்து வருகிறது. நிகழ்சிகளைப்பற்றி நன்கு தெரிந்தவர்களாக மக்கள் உள்ளபடியால் இனி இவர்களிடையே பிரிவுகள் ஏற்படுத்தல் என்பது எளிதல்ல.ஒவ்வொருவரும் பிரசங்கம் செய்யும்போதும், வாக்குமூலங்களைக் கொடுக்கும் போதும் மிகுந்த ஜாக்கிரதையுடனும்,விழிப்புணர்வுடனும் இருத்தல் அவசியமாகிறது. ஏதேனும் அந்தரங்கமான நோக்குடன் செயல்பட்ட எத்தகைய தந்திரமான செயலையும் , குறுகிய மனப்பான்மையின் அறிகுறியையும் மக்களால் கண்டுபிடிக்க இயலும். பெரும் கண்டனத்துக்கு உள்ளாகும்.
பிற ஊடகங்களைப் போல் சமூக ஊடகமும் மிகுந்த பொறுப்புடனும் ஜாக்கிரதையாகவும் செயல்படுதல் வேண்டும்.இல்லையேல், இச் சமூகத்திற்கு பெரும் சேதம் விளையும். 2011-ல் லண்டன் கலகத்தில் , சொத்துக்களுக்குத் தீ வைத்துச் சே தமுண்டாக்கக் கூடிய தம் தாக்குதலை சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியே மேற்கொண்டனர்.சமீபத்தில் இந்தியாவிலும் , சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியே , வட கிழக்கு மாகாண மக்கள் , பெங்களூர், ஹைதராபாத் வாழ்வோரிடையே பயத்தினை உண்டாக்குவதன் மூலம் அவர்தம் சொந்த இடங்களுக்கு பெரும் ஜனத்திரளை வெளியேற்றம் செய்தனர்.
மனிதர்களை ஒன்று சேர்க்க வல்ல தன்னுடைய மாபெரும் சக்தியால் சமூக ஊடகமானது பெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஓர் உபகரணமாக உறுதியளிக்கிறது.சமீபத்தில் சமூக ஊடகம் நிகழ்த்திய வெற்றிகரமான எதிர்ப்புகளின் வாயிலாக சரியான மாற்றங்கள் நிகழ்ந்ததைப் பார்த்தோம்.சமூக ஊடகத்தின் மற்றொரு பிரயோகிப்பு, இந்தியாவில் உபயோகிக்கப் படாமல் மிகப் பெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கும் சக்தியைத் தட்டி எழுப்பி, உபயோகப்படுத்துவது .உதாரணமாக , 'இந்தியநாடு மேன்மை பெற தன்னார்வத் தொண்டரின் பங்கு' - இயக்கத்தில் , எவரேனும், ஏதேனும் ஓர் இடத்தில் மருத்துவ முகாம் என அறிவித்தால் அத்தேதியில் மற்றோரும் அங்கு கூடி பங்கு ஏற்பர்.
அது போலவே மரம் நடுதல்,பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல் - எதுவாகினும்,அவரவர் தம் நேரத்தைக் கொடுத்தோ,அல்லது உபாயத்தாலோ அவர்களுடன் சேவையில் பங்கு கொள்வர்.
தெளிவாகப் பார்க்கப் போனால் நாம் ஒரு மறுமலர்ச்சியினூடே பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இந்தியநாடு இளைஞர் மிகுந்த நாடு, சமூக மறுமலர்ச்சியில் அவர்களுக்கு மிகப்பெரும் பங்கு உள்ளது. சமூக ஊடகம் வாயிலாக அவர்கள் இணைகிறார்கள், சமூக ஊடகம் அவர்கள் குரல் கொடுக்கத் துணை புரிகிறது. இக்குரலே வளர்ந்து, உரத்த குரலாக மாற ஏதுவாகிறது. அதுவே வரவேற்புக்கு உரியது.
* கட்டுரையாளர்: வாழும்கலை அமைப்பின் நிறுவுனர்
குறிப்பு: இணையதளத்தில் வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



