சுடச்சுட

  
  a-veerappan

   

  நகைச்சுவை நடிகர்  ஏ.வீரப்பன் பலவிதத்தில் கெட்டிக்காரர். அவர் இருக்க வேண்டிய இடம் வேறு...அந்த இடத்தில் அவர் இல்லையே என்பது குறித்து எனக்கு நிரம்ப வருத்தமுண்டு. அவர் கவுண்டமணியிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் போனேன். என்னை பார்த்தவுடன் வீரப்பனுக்கு குஷால் கிளம்பி விட்டது. கவுண்டமணியிடம் பேசுவது போல என்னிடம் பேச ஆரம்பித்தார். "இப்ப வர்ற நடிகர்களுக்கு பேசத் தெரியல...பாடத் தெரியல..ஆடத் தெரியல.அந்த காலத்துல நாங்க அப்படியில்ல. எதுவும் செய்வோம்.

  ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிச்ச 'படித்தால் மட்டும் போதுமா' படத்துல நான், சதன் இன்னும் சிலர் சேர்ந்து ஆட வேண்டிய சீன். அந்த நேரத்தில  கம்பெனிக்கும், டான்ஸ் மாஸ்டர் சின்னி சம்பத்துக்கும் ஏதோ உள்நாட்டு பிரச்சினை . டான்ஸ் கம்போஸ் பண்ண மாட்டேன்னுட்டாரு. சிவாஜி என்னை பண்ணச் சொன்னாரு.அவ்வளவுதான் ..ஒரு மணி நேரத்துல..'கோமாளி..கோமாளி' அப்டின்னு துவங்குற அந்த பாட்டுக்கு இதுதான் டான்ஸ்..இப்படி மூவ்மென்ட்ஸ்னு கம்போஸ் பண்ணி  ஷூட் பண்ணவும் ஆரம்பிச்சாச்சு. பாட்டிலே கடைசி அடி இருக்கும் பொழுது டான்ஸ் மாஸ்டர் சின்னி சம்பத் வந்து அங்கே நடக்கிறதைப் பாத்துக்கிட்டு நின்னாரு. அப்புறம்தான் நான் அவரை சமாதானம் பண்ணி பாக்கியுள்ள அடிக்காவது கம்போஸ் பண்ணுங்கன்னு சொல்லி பண்ண வச்சேன்.  அப்போ நான் டான்ஸ் மாஸ்டரிடம் , 'அண்ணே,பாய்ஸ் கம்பெனி பசங்கள விட்டா என்ன வேணா பண்ணுவாங்கண்ணு ' சிரிச்சுகிட்டு சொன்னேன்.

  அப்புறம் ஒரு சமயம் தொழில் சரியா நடக்காத சமயம். வறுமை வறுத்துக் கொட்டுது.  பதமினி பிக்சர்ஸ் தயாரிக்கிற கன்னடப் படத்துக்கு கோரஸ் பட ஆளுங்க வேணும்னு வந்தாங்க. எனக்கும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவனுக்கும் கன்னடமும் தெரியாது.ஒரு எழவும் தெரியாது. செம பட்டினி. அதனால ஒத்துக்கிட்டு போய் கன்னட கோரஸ் பாடினோம். இதுல ஒரு பியூட்டி என்னன்னா ..கோரஸ் பாட வந்த கன்னடப் பசங்கள்ல ரெண்டு பேர ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. நாங்க ஓகே ஆகிட்டோம். ஏன்னா நாங்க பாய்ஸ் கம்பெனி நடிகனுங்க. விட்டா எதுவும் செய்யுற டாலன்ட் எங்களுக்கு இருக்கு...என்று சொல்லி சிரித்தார்.

  அப்பொழுது நாடகங்களில் பாய்ஸ்களாக நுழைந்து அடி உதை பட்டு தேர்ந்து சினிமாவுக்கு மெச்சூரிட்டியுடன் வந்தார்கள். இப்பொழுது சினிமாவுக்குள் நுழையும் போது எல்.கே.ஜி, யூ.கே.ஜி பேபீஸ்களாக நுழைந்து பத்து படங்களுக்கு பிறகுதானே பாய்ஸ்களாகவே மாறுகிறார்கள்.!

  பேட்டி: இமருதம்

  (சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)             

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai