மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

வழி தவறிய பயணங்கள்:  கவிஞர் இரா .இரவி !

Updated On :14 நவம்பர் 2016, 4:58 pm IST

இளைய தலைமுறையில் பலரின் பயணங்கள் 
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !

கற்கும் வயதில் மது குடிக்கும் கொடுமை 
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !

குடி குடியைக் கெடுக்கும் என்பதை படித்துவிட்டு 
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?

என்றைக்காவது என்று தொடங்கிய பழக்கம் 
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் 
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !

அடி தடி சண்டை வந்து கடைசியில் 
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !

காவல் நிலையம் வரையில் வழக்குகள் சென்று 
காப்பாற்றப்   பெற்றோர் வரும் நிலை வருகின்றது !

சனி ஞாயிறு மட்டும் என்று என்கின்றனர் 
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !

உலக அளவில் இளைஞர்கள் அதிகம் 
உள்ள நாட்டிற்கு  குடியால் கேடு வந்தது !

மது குடிக்கும் காட்சிகள் இல்லாத 
திரைப்படங்களே இல்லை என்றானது !

மது மறந்த  இளைஞனுக்கும் இந்த 
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !

குடி விற்பனை இலக்கு ஏன் எட்டவில்லை என்று 
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !

பொறியியல் கல்லூரி விடுப்பில் உள்ளது 
திறந்ததும்  எட்டி விடுவேன் என்றாராம் !

மாணவரே இளையோரே  சாதிக்க பிறந்தவர்கள் 
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?

உடலுக்கும் உயிர்க்கும் கேடு தரும் மது வேண்டாம் 
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !

உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமானால் 
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.