கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா - இரும்புப் பெண்மணி - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.304; ரூ.288; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை -17;   044-2434  2771.
கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா - இரும்புப் பெண்மணி - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.304; ரூ.288; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை -17;   044-2434  2771.

எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு 22 வருடங்கள் அவர் எகிப்தை ஆட்சி செய்தார்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பழிவாங்குதல், வெற்றி, தோல்வி, வீரம், காதல், தாய்மை, இறப்பு என வாழ்வின் அத்தனை அம்சங்களையும் எவ்வாறு கிளியோபாட்ரா திறம்பட எதிர்கொண்டார் என்பதை பல்வேறு வரலாற்று நூல்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது.அன்றைய எகிப்து, கிரேக்க, ரோமப் பேரரசின் ஆட்சி முறையையும் ஜுலியஸ் ஸீஸர், மார்க் ஆன்ட்டனி உள்ளிட்ட வரலாற்று நாயகர்களின் பலம், பலவீனங்களைச் சமரசமின்றி விவரிப்பதோடு, 

வணிகம், வழிபாடு, கல்வி, மதச் சடங்குகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. பெண் என்பதாலேயே எகிப்தின் அரசி கிளியோபாட்ரா, ரோமின் வரலாற்று ஆய்வாளர்களால் அவதூறுக்கு ஆளாகி முதல் எதிரியாகச் சித்திரிக்கப்பட்டார். ரோமின் ஆட்சியாளர்களால் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு கிளியோபாட்ரா தள்ளப்பட்டார்.

வரிக்கு வரி; பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்புடன் நகரும் இந்நூல்,

கிளியோபாட்ரா குறித்த அத்தனை எதிர்மறை பிம்பங்களையும் தக்கச் சான்றுகளுடன் மறுக்கிறது. அவர் அழகுப் பதுமை மட்டுமல்ல;

இரும்புப் பெண்மணியும் கூட என்பதை நூல் விளக்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com