தாமிரவருணி நதியைப் பற்றியும் கரையோரச் சிறப்பு அம்சங்கள்

தாமிரவருணி நதியைப் பற்றியும் கரையோரச் சிறப்பு அம்சங்கள் பற்றியும் இயன்றவரை நல் அறிமுகமாக நிறையவே பதிவு செய்திருக்கிறார் காமராசு. பொதிகை மலை, நதி நெடுகிலும் இருக்கும் அணைகள், அணைக்கட்டுகள்
தாமிரவருணி நதியைப் பற்றியும் கரையோரச் சிறப்பு அம்சங்கள்

தாமிரவருணி நதியைப் பற்றியும் கரையோரச் சிறப்பு அம்சங்கள் பற்றியும் இயன்றவரை நல் அறிமுகமாக நிறையவே பதிவு செய்திருக்கிறார் காமராசு. பொதிகை மலை, நதி நெடுகிலும் இருக்கும் அணைகள், அணைக்கட்டுகள், கோயில்கள், தீர்த்த கட்டங்கள், புஷ்கரத் திருவிழா என எல்லாவற்றைப் பற்றியும் எழுதியிருக்கும் நூலாசிரியர், சில விஷயங்களைப் படிக்கும்போது  இன்னமும் விரிவாகக் கூறியிருக்கலாமோ என்று கேட்கத் தோன்றுகிறது.
நூலில் கோயில்களைப் பற்றிய கட்டுரைகள்தாம் அதிகம். சிவந்தியப்பர் கோயில், பழைய பாபநாசம் கோயில், வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில், சுனையில் உருவான முருகன் கோயில், சேர்மன் அருணாசல சுவாமி, எரிச்சுடையார் திருக்கோயில், அத்தாளநல்லூர் எனப் பல கோயில்கள்.
"தாமிரபரணிக் கரையில் நவ கைலாயங்கள்' 
என்றொரு கட்டுரை, ஒன்பது சிவத் தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல தாமிரபரணிக் கரையில் நவ திருப்பதிகளும் கூட இருக்கின்றன. நூலின் மறுபதிப்பில் அவற்றைப் பற்றியும் எழுதிச் சேர்ப்பது பற்றிச் சிந்திக்கலாம்.  
நதியே கால்வாயை விழுங்கும் அதிசயம், மயக்கும் மண்புழு, மாட்டாத மீன்கள் என சுவாரஸ்யமான விஷயங்களும் கட்டுரைகளில் பதிவு செய்யப்
பட்டுள்ளன.
நூலின் கூடுதலான சிறப்பு அம்சம், இவற்றில் இடம் பெற்றுள்ள படங்கள். ஏறத்தாழ எல்லா கட்டுரை
களிலுமே படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவை வாசகர்கள் நேரில் செல்ல முடியாத குறையைத் தீர்த்துவைக்கின்றன.  படிக்க வேண்டிய நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com