ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும்

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் (கட்டுரைகள் தொகுப்பு) - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.240; ரூ.210; அன்னம், மனை எண்- 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613007.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 10:43 am IST

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் (கட்டுரைகள் தொகுப்பு) - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.240; ரூ.210; அன்னம், மனை எண்- 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613007.

அண்மைக்காலமாக திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், புனையப்பட்ட கற்பனைச் செய்திகளின் அடிப்படையில் கட்டுரைகளாக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு மாறாக, கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் உள்ளன. அவற்றின் தொகுப்பு இந்நூல்.

ஏராளமான படங்களுடன் கூடிய இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிற சில தகவல்கள்:

ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமானின் மகள் என்பது; இந்தத் தகவல் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலிலுள்ள எண்பது கல்வெட்டுகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டதாகும். மேலும் கபிலர் வரலாறு - பாரி மகளை மலையமான் மணந்து கொண்டது உள்ளிட்டவையும் - கபிலர் தன்பணி முடிந்ததும் - "கபிலக்கல்' என்னும் பாறையில் தீ மூட்டி உயிர் துறந்ததும் இக்கல்வெட்டில் உள்ளது.

இக்கல்வெட்டை ராஜராஜனின் மூத்த அதிகாரி மகிமாலய மூவேந்த வேளான் என்பவர் பதிப்பித்திருக்கிறார்.

தவிர திருவாரூரை அடுத்த, "சித்தாய்மூர்' கோயில் கல்வெட்டில் ஜாதிப்பாகுபாடு இன்றி, களத்து மேட்டில் கூலிப் பிச்சை என்று இடுகிற நெல்லை குயவரும் (வேளார்), கோயில் பூசாரியும் எடுத்துக் கொண்டு, தங்களது பங்காக ஐயனார் கோயில் புரவியெடுப்புக்கு பயன்படுத்திய தகவலும் அரிதானதே.

சிதம்பரம் திருக்கோயில், திருவண்ணாமலை திருக்கோயிலிலுள்ள கோபுரங்கள், கோனேரி ராஜபுரம் கோயில் ஆகியவற்றை எழுப்பிய மன்னர்களது சிற்பத்துடன் சிற்பிகளின் சிற்பங்களும் வடிக்கப்பட்டதும் ஆச்சரியத்தைத் தருகிறது.

திருவாரூர் - தாராசுரம் - பட்டீஸ்வரம் உள்ளிட்ட 28 கோயில்களின் சிற்பங்களையும், கல்வெட்டு சாசனங்களையும் விரித்துரைக்கும் இந்நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.