தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பருப்பு பாயசம்

பாயசம் என்றாலே பலருக்கும் பருப்புப் பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

News image

பருப்பு பாயசம்

Updated On :7 ஜனவரி 2021, 11:35 am IST

பாயசம் என்றாலே பலருக்கும் பருப்புப் பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கிண்ணம், நாட்டுச்சர்க்கரை - அரை கிண்ணம், தேங்காய்ப் பால் - அரை டம்ளர், பால் - 2 டம்ளர், முந்திரி - தேவைக்கேற்ப, சுக்குப் பொடி - 1 சிட்டிகை, நெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுச் சர்க்கரையை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.) பின்னர், வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் மசித்து வைத்துள்ள கடலைப் பருப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனைப் போக கொதிக்கவிட்டு, வறுத்த முந்திரியை தூவி இறக்கினால், பருப்பு பாயசம் ரெடி. ( விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயசத்தில் சேர்க்கலாம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.