மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

பூரணம் ரவா இட்லி

கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்து தண்ணீர் வடிக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி காய்ச்சவும்.

News image

பூரணம் ரவா இட்லி

Updated On :28 ஜூன் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

ரவை, தயிர் - தலா ஒரு கிண்ணம்

எண்ணெய் -ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை கிண்ணம்

வெல்லம் - முக்கால் கிண்ணம்

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 2 மேஜை கரண்டி

நெய் -1 தேக்கரண்டி

தண்ணீர், உப்பு, சமையல் சோடா - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்து தண்ணீர் வடிக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி காய்ச்சவும். அதில் வேக வைத்த பருப்பு, தேங்காய், ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும் நெய் சேர்த்து இறக்கவும். குளிர்ந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ரவை, தயிர், உப்பு சேர்த்து கலக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கலக்கவும். 15 -20 நிமிடம் ஊற விடவும். ஆவியில் வேகவைக்கும் முன் சோடா மாவு சேர்த்து மெதுவாகக் கலக்கவும். இட்லி தட்டில் சிறிது மாவு ஊற்றவும். நடுவில் ஒரு பூரண உருண்டை வைக்கவும். மேலே மீண்டும் மாவு ஊற்றி மூடவும். ஆவியில் 10- 12 நிமிடம் வேக விடவும். வெந்ததும் நெய் தடவி சூடாகப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.