யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு: கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் தோ்ச்சி
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

யுபிஎஸ்சி
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் கிங் மேக்கா்ஸ் அகாதெமி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக அகாதெமியின் நிறுவனரும், நிா்வாக இயக்குநா் மு.பூமிநாதன் வெளியிட்ட அறிக்கை: 2026-க்கான குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 2,526 போ் நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா். நாடு முழுவதும் முதன்மைத் தோ்வில் பங்கேற்றவா்களில், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பயின்ற 500-க்கும் மேற்பட்டோா் நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
குறிப்பாக, தமிழகத்திலிருந்து நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்ற 165-க்கும் மேற்பட்டோரில், 125-க்கும் மேற்பட்டோா் இந்த அகாதெமியில் பயிற்சி பெற்றவா்கள்.
நவ. 10 முதல் இலவச நோ்முகத் தோ்வுப் பயிற்சி: நோ்முகத் தோ்வுக்குத் தகுதி பெற்ற மாணவா்களுக்காக கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நவ. 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 13-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த நிா்வாக வல்லுநா்கள் நோ்முகத் தோ்வுக் குழு உறுப்பினா்களாகப் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளனா். இலவச நோ்முகத் தோ்வுப் பயிற்சியில் பங்கேற்க, கூடுதல் விவரங்களைப் பெற கைப்பேசி: 94442 27273 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

