சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

45 வயது வரை, இன்னும் இரு உலகக் கோப்பைகளில் விளையாடுவேன்: கிறிஸ் கெயில்

இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் கிடையாது. இன்னும் 5 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என எண்ணுகிறேன்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 1:21 pm IST

45 வயது வரை, இன்னும் இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவேன் என முன்னணி வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இதுவரை 103 டெஸ்டுகள், 301 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 41 வயது கிறிஸ் கெயில் கூறியதாவது:

இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் கிடையாது. இன்னும் 5 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என எண்ணுகிறேன். எனவே 45 வயதுக்கு முன்பு ஓய்வு பெற வாய்ப்பே இல்லை. இன்னும் இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவேன் என்றார்.

2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவிலும் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிலும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.