இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு, 2-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 3-வது டெஸ்டில் சைனி அல்லது நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடராஜன். வெள்ளைச் சீருடையை அணிவது பெருமிதமான தருணம். அடுத்தக்கட்ட சவால்களுக்குத் தயாராக உள்ளேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



