கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த நியூஸிலாந்து, இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் ஆனார்.
கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 2-ஆவது டெஸ்டில், டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச, பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸôர் அலி 93 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்தின் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய நியூஸிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 238 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தை அபித் அலி, முகமது அப்பாஸ் ஆகியோர் தொடங்கினர்.
இதில் அபித் 26 ரன்களுக்கு வெளியேற, முகமது அப்பாஸ் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்தவர்களில் அஸôர் அலி 37, ஹாரிஸ் சோஹைல் 15 ரன்கள் சேர்த்தனர். ஃபவாத் ஆலம் 16, கேப்டன் முகமது ரிஸ்வான் 10, ஃபஹீம் அஷ்ரஃப் 28 ரன்கள் எடுத்தனர்.
ஜாஃபர் கோஹர் 37, ஷாஹீன் அஃப்ரிதி 7 ரன்கள் சேர்க்க, 81.4 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான். நியூஸிலாந்து பெளலர் கைல் ஜேமிசன் 6, டிரென்ட் போல்ட் 3, கேன் வில்லியம்சன் 1 விக்கெட் சாய்த்தனர்.
டெஸ்ட் தரவரிசை: முதல் முறையாக முதலிடம்
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற நியூஸிலாந்து, ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது.
கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் 6-ஆவது அணி நியூஸிலாந்து ஆகும். ஒட்டுமொத்த காலகட்டத்தில், முதலிடம் பிடிக்கும் 7-ஆவது அணியாகவும் உள்ளது.
நியூஸிலாந்து 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ஆஸ்திரேலியா (116), இந்தியா (114) முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத்: பண மழையில் நனைந்த பாடகர்!

ஹோர்முஸ் நீரிணை எதிரிகளைத் தவிர அனைவருக்கும் திறப்பு! - தில்லியில் ஈரானிய அமைச்சர் பேச்சு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்
பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

