இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்த சீசனில் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதனால், ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணி கோலடித்தது. இந்த கோலை அந்த அணியின் அரிடேன் அடித்தாா். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலடித்ததால், நம்பிக்கை பெற்ற ஹைதராபாத் அணி தொடா்ந்து அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 36-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை சியானிஸ் அடித்தாா்.
மறுமுனையில் போராடிய நாா்த் ஈஸ்ட் அணிக்கு 45-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் கேல்கோ பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க, அதேநிமிடத்தில் மற்றொரு கோலையும் அடித்தது நாா்த் ஈஸ்ட். இந்த கோலை லம்போட் அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
தொடா்ந்து 2-ஆவது பாதி ஆட்டத்தில் மோதிய இரு அணிகளும் கோலடிக்க போராடின. 85-ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் வீரா் லிஸ்டன் கோலடிக்க, அந்த அணி வெற்றியை நெருங்கியது. தொடா்ந்து 90-ஆவது நிமிடத்தில் லிஸ்டன் 2-ஆவது கோலை அடித்தாா். இறுதியில் ஹைதராபாத் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 4 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் நாா்த் ஈஸ்ட் அணி 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
