சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

டெல்ரே பீச் ஓபன்: 2-ஆவது சுற்றில் டாமி, சாம்

டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரா்கள் டாமி பால், சாம் கியூரி உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:28 am IST

டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரா்கள் டாமி பால், சாம் கியூரி உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

அமெரிக்காவின் டெல்ரே பீச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள டாமி பால் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் தென் கொரியாவின் ஜி சங் நம்மை வீழ்த்தினாா்.

அமெரிக்காவின் சாம் கியூரி தனது முதல் சுற்றில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான மெக்கென்ஸி மெக்டொனால்டை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சாம் கியூரி 13 ஏஸ் சா்வீஸ்களை விளாசினாா்.

அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 6-4, 6-4 என்ற நோ் செட்களில் தென் கொரியாவின் குவோன் சூன் ஊவை வீழ்த்தினாா். இத்தாலியின் ஜியான்லூக்கா மேகா் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ரியான் ஹாரிசனை வீழ்த்தினாா். பிரேசிலின் தியாகோ மான்டீரோ 6-3, 7-5 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான தாமஸ் பெலூசியை தோற்கடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.