இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.
காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு சிட்னி டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹாரிஸை 5 ரன்களில் வீழ்த்தினார் ஷர்துல் தாக்குர். இதன்பிறகு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது ஸ்மித் - லபுசேன் ஜோடி. ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது வாஷிங்டனின் முதல் டெஸ்ட் விக்கெட்.
முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 73, மேத்யூ வேட் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுத்தேர்வு எப்படி இருந்தது? - தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து!

மக்களை நோக்கி விஜய்... தலைவாவிலிருந்து ஜன நாயகன் வரை!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை நோக்கி... விஜய் நேர்காணல் -5!

ரூ.6,550 செலுத்தினால் முத்ரா யோஜனா திட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்? - மத்திய அரசு மறுப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




