டெஸ்டில் விளையாடும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன் எனத் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.
காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான திறமைகள் என்னிடம் இருப்பதாக எப்போதும் உணர்வேன். முதல்தர கிரிக்கெட்டில் நிறைய ஆட்டங்களில் பந்துவீசியுள்ளேன். மேலும் சென்னை முதல் டிவிஷன் லீக் ஆட்டங்களிலும் நிறைய விளையாடியுள்ளேன். எனவே சிகப்பு பந்தில் ஏராளமாகப் பந்துவீசியுள்ளேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். கடந்த சில மாதங்களாக நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். எனவே பந்துவீச நிறைய வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் என்னுடைய பந்துவீச்சுத் திறமை அதிகரித்துள்ளது.
நாங்கள் அனைவரும் முதல்தர கிரிக்கெட்டில் நன்கு விளையாடியுள்ளோம். இந்தியாவுக்காக விளையாடுவது அற்புதமான வாய்ப்பு. இதில் திறமையை நன்கு வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ்..! கால்பந்து திடலில் குவிந்த ரசிகர்கள்!

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


