தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆனந்தின் அடுத்த "மூவ்'

அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக விரைவில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.  சர்வதேச செஸ் போட்டிகளில் இந்தியாவின் பெயரை உலகறியச் செய்த சாத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:22 pm

அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக விரைவில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

 சர்வதேச செஸ் போட்டிகளில் இந்தியாவின் பெயரை உலகறியச் செய்த சாதனைத் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த். உலகச் செஸ் சாம்பியன் பட்டத்தை தன் வசம் வைத்துள்ள விஸ்வநாதன் ஆனந்த், 1983-ம் ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டங்களை வென்று வருபவர்.

 இப்போது 42-வயதை எட்டியுள்ள அவர், உலகச் செஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். 2012-ம் ஆண்டு மே மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ள உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

 இந்த நிலையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் "தினமணி'க்கு அளித்த சிறப்பு பேட்டி.

 தமிழகத்தில் செஸ் போட்டி எந்த நிலையில் உள்ளது?

 செஸ் விளையாட்டை பொறுத்தவரையில் இந்தியாவில் தமிழகத்துக்கே முதலிடம். செஸ் விளையாட்டில் இங்குள்ளவர்களுக்கு அபார ஞானமும், ஆற்றலும் உள்ளது. தமிழகத்தில் செஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

 சர்வதேச செஸ் போட்டிகளில் உங்களுக்குப் பிறகு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார் ?

 கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் நம்பிக்கையூட்டும் வகையில் ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஆட்ட நுணுக்கமும், வேகமும் சிறப்பாக உள்ளது. மேலும், சில வீரர்களும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது உத்வேகத்தை அளிக்கிறது.

 உங்களுடைய அடுத்த சர்வதேசப்

 போட்டி ?

 ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 2012-ம் ஆண்டு மே மாதம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் உலகின் 15-ம் நிலை வீரரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த போரிஸ் கெல்ஃபான்டை எதிர்த்து விளையாட உள்ளேன். இதற்கான பயிற்சியை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளேன்.

 அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் நீங்கள் அதிகமாக "டிரா' செய்கிறீர்கள் என்று கூறப்படுவது குறித்து...

 போட்டியை எந்தவொரு வீரரும் டிரா செய்யும் நோக்கத்துடன் விளையாடுவதில்லை. என்னுடைய செஸ் வாழ்க்கையில் மிகக் குறைவான போட்டிகளிலேயே டிரா செய்துள்ளேன்.

 உங்களை எதிர்த்து விளையாடிய

 சிறந்த வீரர் ?

 ரஷிய வீரர் கார்போவை எதிர்த்து விளையாடிய போட்டிகள் சிறப்பானவை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். காய்களை நகர்த்தும் கார்போவின் திறன் அபாரமானது.

 கிரிக்கெட் ரசிகரான நீங்கள், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் எதிர்பார்ப்பது என்ன ?

 சச்சின் டென்டுல்கரின் 100-வது சர்வதேச சதத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளேன். இப்போதைய ஆஸ்திரேலிய அணியின் நிலைமை குறித்து எனக்கு தெரியவில்லை. எனினும், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெல்ல வாழ்த்துகிறேன்.

 பாரத ரத்னா விருதில் விளையாட்டுத் துறையை சேர்த்தது குறித்து ?

 இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. பாரத ரத்னா விருது பெறுவது கௌரவம். மத்திய அரசு தகுந்த விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 இந்தியாவில் செஸ் போட்டியை ஊக்கப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் உள்ளதா ?

 என்.ஐ.ஐ.டி. மைண்ட் சாம்பியன்ஸ் அகாதெமியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 6,000 பள்ளிகளில் செஸ் பயிற்சி நடைபெறுகிறது. செஸ் விளையாடுவதால் மாணவர்களுக்கு நினைவாற்றல் வளரும் என்பதால் பெற்றோர்களும் அதை ஊக்குவிக்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.