சென்னை ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா சாம்பியன்
சென்னை, ஜன.9: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வ


சென்னை, ஜன.9: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும், 61-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் சேவியர் மலிஸýம் மோதினர்.
முதல் செட்டில் முதல் கேமில் சர்வீûஸ சிறப்பாக கையாண்டார் வாவ்ரிங்கா. அதேசமயம் மலிஸ் மிகச்சிறப்பாக ஆடினார். கடுமையாகப் போராடிய மலிஸ் வாவ்ரிங்காவின் சர்வீûஸ முறியடித்து கேமை தன்வசமாக்கி வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சியளித்தார். இரண்டாவது கேமிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த கேமை கைப்பற்றினார்.
பின்னர் அடுத்தடுத்த கேம்களில் மலிஸின் சர்வீûஸ முறியடிக்க வாவ்ரிங்கா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
6-வது கேமில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தேவையில்லாமல் தூக்கியடித்து வீணடித்தார் வாவ்ரிங்கா. இதனால் அந்த கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடித்து சமநிலை பெறும் வாய்ப்பை இழந்தார்.
அதன்பிறகு 8-வது கேமில் சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா, மலிஸ் செய்த சிறிய தவறுகளை சரியாகப் பயன்படுத்தி அவரது சர்வீûஸ முறியடித்து 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றார். பின்னர் 12-வது கேமில் கிடைத்த சில வாய்ப்புகளை வாவ்ரிங்கா தவறவிட்டபோதிலும், அந்த கேமை வென்று செட்டைக் கைப்பற்றினார்.
இதில் மலிஸின் சர்வீஸ்களை மிகவும் மெதுவாக வந்ததும் வாவ்ரிங்காவின் வெற்றிக்கு காரணமாகும். இதன்மூலம் அவர் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
நீடித்த போராட்டம்: பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் வாவ்ரிங்கா, மலிஸ் இருவருமே சிறப்பாக சர்வீஸ் போட்டனர். இரண்டாவது கேமில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை வாவ்ரிங்கா வீணடித்தார். அவர் அடிக்கடி பந்தை லைனுக்கு வெளியில் அடித்தது அவருக்கு பெரிய பின்னடைவாகும்.
3-வது கேமில் வாவ்ரிங்கா சிறப்பான சர்வீஸ்களைப் போட்டபோதும், நேர்த்தியான ஷாட்களை அடிக்கத் தவறினார். அதை கணித்த மலிஸ், மைதானத்தில் முன்னேறி வந்து பந்தை மெதுவாக நெட் அருகில் தட்டிவிட்டு வாவ்ரிங்காவின் சர்வீûஸ முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
அதன்பிறகு இருவரும் சிறப்பாக ஆடினாலும், தங்களின் சர்வீஸ்களை தக்க வைத்துக்கொண்டனர். இறுதியில் 10-வது கேமில் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார் மலிஸ்.
வெற்றி வசமானது: பின்னர் நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது செட்டில் ஆரம்பத்தில் இருந்தே வாவ்ரிங்கா அபாரமாக ஆடினார். இந்த செட்டின் 2-வது கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் வாவ்ரிங்கா. இதையடுத்து வேகமாக ஆடிய அவர், மலிஸýக்கு கடும் நெருக்கடியை அளித்தார்.
வாவ்ரிங்காவின் ஷாட்களை எதிர்கொள்ளத் தடுமாறினார் மலிஸ். இதையெல்லாம் சரியாகப் பயன்படுத்திய வாவ்ரிங்கா 5-வது கேமில் மலிஸின் சர்வீûஸ மீண்டும் முறியடித்தார். பின்னர் இறுதியில் 6-1 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் 2 மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. சென்னை ஓபன் டென்னிஸ் பட்டத்தை வாவ்ரிங்கா இப்போது முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய வாவ்ரிங்கா, மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...