ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இறுதிச் சுற்றில் மும்பை-பெங்களூர்

சென்னை, அக்.8: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இண்டியன்ஸ். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

சென்னை, அக்.8: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இண்டியன்ஸ்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூர்-மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 2-வது அரையிறுதியில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சோமர்செட் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாஸ்: இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சூர்ய குமார் யாதவ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டும், கன்வாரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 6 பந்துகளைச் சந்தித்த கன்வார் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ராயுடு நிதானமாக ஆடியபோதும், பிளிஸ்ஸôர்டு அதிரடியாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 62 ரன்களை எட்டியபோது ராயுடு 19 ரன்களில் வெளியேறினார்.

பிளிஸ்ஸôர்டு அரைசதம்: மறுமுனையில் பிளிஸ்ஸôர்டு சிக்ஸர் அடித்து 37 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனிடையே பிராங்க்ளின் 6 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பிளிஸ்ஸôர்டும் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். பொல்லார்டு 2 சிக்ஸர்களை விளாச மீண்டும் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அவர் 18 பந்துகளில் 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்தார்.

சதீஷ் அதிரடி: கடைசிக் கட்டத்தில் சூர்ய குமார் -சதீஷ் ஜோடி அதிரடியில் இறங்கியது. இதனால் மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. சூர்ய குமார் 23 ரன்களும், சதீஷ் 12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

அதிர்ச்சித் தொடக்கம்: 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சோமர்செட்டுக்கு ஆரம்பமே அதிர்ச்சிக் காத்திருந்தது. மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார் டிரெகோ. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வான்டர்மெர்வ் 10 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதன்பிறகு கீஸ்வெட்டர் அதிரடியாக விளையாட, ஹில்ட்ரெத் அவருக்கு பக்கபலமாக விளையாடினார். ஹில்ட்ரெத் 39 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து ஜோசப் பட்லர் களமிறங்கினார். மறுமுனையில் கீஸ்வெட்டர் 40 பந்துகளில் அரைசதம் கண்டார். கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தால் சோமர்செட் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

திருப்புமுனை: மலிங்கா வீசிய 18-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 19-வது ஓவரை பிராங்க்ளின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஜோஸ் பட்லர் 19 ரன்களில் போல்டு ஆனார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட கீஸ்வெட்டர் சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் பந்து பொல்லார்டு கையில் தஞ்சம் புகுந்தது. 46 பந்துகளைச் சந்தித்த கீஸ்வெட்டர் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் சோமர்செட்டின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மலிங்கா, காம்ப்டன், கார்த்திக் ஆகியோரை அடுத்தடுத்து போல்டாக்கினார். இறுதியில் சோமர்செட் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

சுருக்கமான ஸ்கோர்

மும்பை - 160/5

(பிளிஸ்ஸôர்டு 54, சதீஷ் 25*)

சோமர்செட் - 150/7

(கீஸ்வெட்டர் 62, மலிங்கா 4வி/20)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.