நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெற்றியுடன் தொடங்கியது மும்பை இண்டியன்ஸ்

சென்னை, ஏப். 5: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வென்றது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:29 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஏப். 5: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வென்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது.

அந்த அணியின் தொடக்க வீரர் ரிச்சர்ட் லெவி 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5-வது சீசனின் முதல் ஆட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது.

சூப்பர் கிங்ஸ் அணியின் பிளெஸ்ஸிஸ், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரின் 4-வது பந்தில் பிளெஸ்ஸிஸ் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரெய்னா களமிறங்கினார். ஸ்கோர் 38 ஆக இருந்தபோது முரளி விஜய் 10 ரன்களில் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிராவோ களம் கண்டார். 7.3 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். சென்னை அணியில் அதிகபட்ச ரன் எடுத்ததும் ரெய்னாதான்.

சென்னை சரிவு: ரெய்னா அவுட் ஆனபின் சென்னை அணி சரிவுக்குள்ளானது. பிராவோ 19 ரன்கள், மோர்கல் 3 ரன்கள், கேப்டன் தோனி 4 ரன்கள், பத்ரிநாத் 10 ரன்கள், அஸ்வின் 3 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 3 ரன்கள், போலிங்கர் 3 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜகாதி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிறப்பான தொடக்கம்: பின்னர் பேட் செய்த மும்பை அணிக்கு ரிச்சர்டு லெவி-சச்சின் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தது. மும்பைக்கு முதல் சிக்ஸரை அடித்தார் சச்சின். இதன்பிறகு சென்னை பெüலர்களை பதம்பார்த்தார் லெவி. ஜடேஜா வீசிய 6-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியையும், அடுத்த பந்தில் சிக்ஸரையும் அடித்தார் லெவி. கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார் லெவி. அந்த ஓவரில் மட்டும் 16 ரன்களை வாரி வழங்கினார் ஜடேஜா.

அறிமுக ஆட்டத்தில் அரைசதம்: டுவைன் பிராவோ வீசிய 8-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் லெவி. ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரரான லெவி அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் கண்டார்.

சச்சின் "ரிட்டையர்டு ஹர்ட்' இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா ரன் கணக்கைத் தொடங்காமலேயே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். 3 பந்துகளைச் சந்தித்த அவர் போலிங்கர் பந்துவீச்சில் தோனியால் அற்புதமாகக் கேட்ச் செய்யப்பட்டார். இதையடுத்து சச்சினுடன் இணைந்தார் அம்பதி ராயுடு. ஆனால் சிறிது நேரத்திலேயே சச்சின் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 15 பந்துகளைச் சந்தித்த அவர், 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ராயுடுடன் இணைந்தார் ஜேம்ஸ் பிராங்க்ளின். இதன்பிறகு இருவரும் நிதானமாகவே ஆடியதால் ஸ்கோர் வேகமும் குறைந்தது. 16-வது ஓவரின் 5-வது பந்தில் ராயுடு சிக்ஸர் அடிக்க 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. லெவி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மந்தமான ஆட்டம்: ரிச்சர்டு லெவி, ரெய்னாவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ரன் எடுக்க சிரமப்பட்டனர்.

இதனால் விறுவிறுப்பின்றியே காணப்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு கிரிக்கெட் ஆட்டத்தைவிட, ஒலித்த தமிழ் குத்துப்பாடல்கள்தான் விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் மொத்தத்தில் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.

போட்டித் துளிகள்...

*ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 63 ஆட்டங்களிலும் பங்கேற்றவர்கள் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னாவும், எஸ்.பத்ரிநாத்தும் பெற்றுள்ளனர். இதுவரை அவர்கள் இருவரும் ஓர் ஆட்டத்தைக்கூட இழக்கவில்லை.

* இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் குவித்த ரெய்னா, ஐபில் போட்டியில் சென்னை அணி சார்பில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 63 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,849 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 36.25.

*ரெய்னா இதுவரை 79 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட் 82 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

* மும்பைக்கு எதிராக 112 ரன்களில் ஆட்டமிழந்ததுதான் சென்னை அணி ஐபிஎல் போட்டியில் எடுத்த 2-வது குறைந்தபட்ச ஸ்கோர். 2008 மே 4-ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 109 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ஸ்கோர்.

* ஐபிஎல் போட்டியில் 30 கேட்ச் பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பையின் ரோஹித் சர்மா. ரெய்னா இதுவரை 31 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.