நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை, ஏப். 28: ஐபிஎல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். பஞ்சாபின் அசார் மெஹ்மூத் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியில் மூன்று முக்கிய விக்கெட்ட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:54 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஏப். 28: ஐபிஎல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பஞ்சாபின் அசார் மெஹ்மூத் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் டேவிட் ஹசி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மன்தீப் சிங்-ஷான் மார்ஸ் ஜோடி பஞ்சாபின் இன்னிங்ûஸத் தொடங்கியது. மார்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், மன்தீப் சிங் வேகமாகவே விளையாடினார். அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் சிக்ஸர் ஒன்றை விளாசினார் மன்தீப். இதனால் 7 ஓவர்களில் 51 ரன்களை எட்டியது பஞ்சாப்.

ஜகாதி வீசிய 8-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸரை விளாசிய மார்ஸ், அடுத்த இரு பந்துகளில் பவுண்டரிகளை விளாசினார்.

ஆனால் அவரின் அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9-வது ஓவரில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார் மார்ஸ். இதையடுத்து களம் கண்ட அசார் மெஹ்மூத் வந்த வேகத்தில் ஜடேஜா ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த அசார், பிராவோ வீசிய 12-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் மன்தீப் சிங் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். 15 பந்துகளைச் சந்தித்த டேவிட் மில்லர் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அந்த அணி 133 ரன்களை எட்டியபோது மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் மன்தீப். கேப்டன் டேவிட் ஹசி 4 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த பியூஸ் சாவ்லா,தான் சந்தித்த 2-வது பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் எல்லையில் நின்ற பிராவோ அற்புதமாக கேட்ச் செய்ய டக்அவுட் ஆனார் சாவ்லா. பிபுல் சர்மா 7, நிதின் சைனி 6 ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது பஞ்சாப்.

பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடாததால் கடைசி 5 ஓவர்களில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். சென்னை தரப்பில் அல்பி மோர்கல் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிரடி தொடக்கம்

பின்னர் பேட் செய்த சென்னை அணியில் டூ பிளெஸ்ஸிஸ் -பத்ரிநாத் ஜோடி அதிரடியாக விளையாட 5 ஓவர்களில் 40 ரன்களை எட்டியது சென்னை. இதையடுத்து 6-வது ஓவரை வீச அசார் மெஹ்மூத்தை அழைத்தார் டேவிட் ஹசி. அதற்கு பலனும் கிடைத்தது. 20 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் டூ பிளெஸ்ஸிஸ். 18 பந்துகளைச் சந்தித்த பத்ரிநாத் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து அசார் மெஹ்மூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சரிந்தது சென்னை

17 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 15 ரன்களில் ஸ்டெம்பிங் ஆக 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. 14 பந்துகளைச் சந்தித்த ரித்திமான் சாஹா 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் தோனி பந்தை ஸ்டெம்ப் அருகில் தட்டிவிட்டு பந்து எங்கு செல்கிறது என்று தெரியாமலேயே ரன் எடுக்க ஓட, ஸ்டெம்பை தகர்த்தார் நிதின் சைனி.

4 பந்துகளைச் சந்தித்த தோனி 1 ரன் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்தார் பிரோவோ. பார்கவ் பட் வீசிய 14-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்த ஜடேஜா, அடுத்த ஓவரில் ஆட்டமிழக்க 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சென்னை. இதையடுத்து அல்பி மோர்கல் களமிறங்கினார்.

கடைசி 4 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டன. பிரவீண் குமார் வீசிய 17-வது ஓவரில் பிராவோ சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள் கிடைத்தன. ஆனால் 18-வது ஓவரை வீசிய அவானா, 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரவீண் குமார் வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்த பிராவோ அந்த ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். 21 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும் அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்ததால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அசார் மெஹ்மூத் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அல்பி மோர்கல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை 7 ரன்களில் தோல்வி கண்டது. அஸ்வின் 7, குலசேகரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அரைசதம் அடித்த பஞ்சாபின் தொடக்கவீரர் மன்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் 156 ரன்களே எடுத்திருந்ததால், சென்னை எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். சென்னை அணியில் தொடக்கம் சரியாக இருந்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் ரசிகர்களின் உற்சாகம் சிறிது சிறிதாகக் குறைந்தது. இறுதியில் சென்னை தோல்வியடைந்தது உள்ளூர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.



பிராவோ-டூபிளெஸ்ஸிஸ் மோதல்!

அஸ்வின் வீசிய 15-வது ஓவரின் கடைசிப் பந்தில் மன்தீப் சிங் ஸ்டெரெய்ட் திசையில் தூக்கியடித்தார். அப்போது பந்தைப் பிடிக்க ஓடிவந்த டூபிளெஸ்ஸிஸýம், பிராவோவும் மோதி கீழே விழுந்தனர். இதில் டூபிளெஸ்ஸிஸýக்கு அடிபட்டது.

ரன் குவிப்பில்... இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டூபிளெஸ்ஸிஸ் 331 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். ரஹானே 8 ஆட்டங்களில் 332 ரன்கள் குவித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சேவாக் 8 ஆட்டங்களில் 309 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார்.

சிக்ஸர்களில் 3-வது இடம்: இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர் அடித்ததன் மூலம் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் டூபிளெஸ்ஸிஸ். இதுவரை அவர் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பீட்டர்சன் (டெல்லி), கெயில் (பெங்களூர்) ஆகியோர் தலா 19 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.



சுருக்கமான ஸ்கோர்

பஞ்சாப் 156/8

(20 ஓவர்களில்)

(மன்தீப் சிங் 56, மார்ஷ் 32, மோர்கல் 3வி/29)

சென்னை 149/8

(20 ஓவர்களில்)

(பிராவோ 30, டூ பிளெஸ்ஸிஸ் 29, அசார் 3வி/25)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.