நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை ஓபன்: மலிஸூக்கு அதிர்ச்சி

சென்னை, ஜன.3: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.  கடந்த முறை இறுதிச் சுற்றுவரை முன்னேறிய சேவியர் மலிஸ் 6-4, 2-6, 3-6 என்ற செட் கணக்கி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:27 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜன.3: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

 கடந்த முறை இறுதிச் சுற்றுவரை முன்னேறிய சேவியர் மலிஸ் 6-4, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான டேவிட் கோபினிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

 தரவரிசையில் 174-வது இடத்தில் உள்ள கோபின், 49-வது இடத்தில் உள்ள மலிûஸ வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இப்போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்த முறை வைல்டுகார்டு (நேரடித் தகுதி) பெற்ற கோபின், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டியில் 3 செட் வரை சென்ற முதல் ஆட்டம் இதுதான்.

 சரியான போட்டி: 17-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 போட்டியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒற்றையர் முதல் சுற்றின் 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் சக நாட்டு வீரரான டேவிட் கோபினை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சேவியர் மலிஸýக்கு சவால் அளிக்கும் வகையில் கோபின் விளையாடினார்.

 4-வது கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடிக்கும் வகையில், வேகமாக முன்னேறினார். ஆனால் கடைசிக் கட்டத்தில் சரிவிலிருந்து மீண்ட மலிஸ் அந்த கேமை தன்வசமாக்கினார். அடுத்த கேமில் டேவிட் கோபினின் சர்வீûஸ முறியடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

 இறுதியில் மலிஸ் 6-4 என்ற கணக்கில் வென்று 39 நிமிடங்களில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார்.

 முதல் செட்டை இழந்தாலும், இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடிய கோபின் 6-வது கேமில் மலிஸிடம் இருந்து ஆட்டத்தைப் பறித்தார்.

 இந்த கேமில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய அவர் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அடுத்த கேமில் கோபினின் சர்வீûஸ முறியடிக்க கடுமையாகப் போராடினார் மலிஸ். ஆனாலும் கடைசிக் கட்டத்தில் அந்த கேம் கோபினின் வசமே சென்றது. இதனால் மலிஸ் பதற்றமடைந்தார்.

 இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கோபின், 8-வது கேமில் மலிஸின் சர்வீûஸ மீண்டும் முறியடித்து 6-2 என்ற கணக்கில் செட்டை வென்றார்.

 இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க மூன்றாவது செட் நடைபெற்றது. ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும், முதல் கேமை போராடி தன்வசமாக்கினார் கோபின்.

 இரண்டாவது கேமில் தனது சர்வீûஸ கடுமையாகப் போராடியே வென்றார் மலிஸ். இரண்டாவது செட்டை போலவே மூன்றாவது செட்டிலும் 6-வது கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடித்தார் கோபின். இதன்பிறகு ஆட்டம் முற்றிலும் கோபினின் வசமானது. அதைத் தொடர்ந்து மிகவும் கவனமாக விளையாடிய கோபின் இறுதியில் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றார். இதன்மூலம் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கோபின் வெற்றி கண்டார். இந்த ஆட்டம் 1 மணி 53 நிமிடங்கள் நடைபெற்றது.

 பதற்றமடைந்த மலிஸ்: ஆட்டத்தில் பின்னடைவைச் சந்திக்கும்போது வழக்கமாகவே கோபமடையும் சுபாவம் கொண்டவர் மலிஸ். கோபினுக்கு எதிரான ஆட்டத்தில் மலிஸிடம் அதைக் காண முடிந்தது. இரண்டாவது செட்டில் சர்வீûஸ இழந்தபோதே அவர் சற்று பதற்றமடைந்தார்.

 மூன்றாவது செட்டில் ஆட்டத்தை முழுவதுமாக இழக்கும் நிலை ஏற்பட்டது. பந்துகளை எடுத்து மைதானத்தின் வெளிப்பகுதியில் அடித்தார். அதில் ஒன்று ரசிகர் கூட்டத்திலும், மற்றொன்று மைதானத்துக்கு வெளியிலும் சென்றது.

 விக்டர் வெற்றி: மற்றோர் ஆட்டத்தில் ருமேனியாவின் விக்டர் ஹனிஸ்கு 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சாம் கெர்ரேவை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தைப் பொருத்தவரையில் சாம் கெர்ரே அதிவேக சர்வீஸ்களை ஆக்ரோஷமாக அடித்தாலும், சரியான ஷார்ட்டுகளை அடிக்கத் தவறினார்.

 இதனால் விக்டருக்கு எளிதாக வெற்றி வசமானது. இவர் அடுத்த சுற்றில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கைச் சந்திக்கிறார். அந்த சுற்று கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மற்ற ஆட்டங்களில் பிரான்ஸின் வேஸலின் 6-4, 6-3 என சக நாட்டு வீரர் எரிக் புரோடானையும், ஜெர்மனியின் ஆன்ட்ரியாஸ் பெக் 6-3, 7-6 (8) என கனடாவின் வேசக் போஸ்பிஸிலையும், சீனதைபேவின் யென் சன் லூ 6-3, 6-3 எனநெதர்லாந்தின் தீமோ டி பெக்கரையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.