முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கால்பந்து : ஐ.சி.எஃப். சாம்பியன்

திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது.  ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வத

Updated On :20 செப்டம்பர் 2012, 1:26 am

திருச்சி, மே 23: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் சென்னை ஐ.சி.எஃப். அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் கோட்டங்களுக்கிடையேயான 23-வது கால்பந்து போட்டிகள் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன. இதில் ரயில்வே பாதுகாப்புப் படையின் திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், ஐ.சி.எஃப்., சென்னை தெற்கு ரயில்வே ஆகிய 5 கோட்டங்களிலிருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றன. திருவனந்தபுரம் கோட்ட அணி தவிர, மற்ற நான்கு அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு பெற்றன.

 அரையிறுதி ஆட்டங்களில் திருச்சி அணியை ஐ.சி.எஃப். அணியும், சென்னை தெற்கு ரயில்வே அணியை பாலக்காடு அணியும் வென்றன. இறுதிப் போட்டியில் ஐ.சி.எஃப். அணி 5-1 என்ற கோல் கணக்கில் பாலக்காடு அணியை வென்றது. போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஐ.சி.எஃப். அணிக்கு தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பி.வி. வைத்தியலிங்கம் கோப்பையை வழங்கிப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.