இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஐடிஎஃப் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜீவன்-விக்டர் மோதல்

எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின்

Updated On :2 மார்ச் 2013, 2:41 am IST

எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின் விக்டர் கிரிவாய் ஆகியோர் மோதுகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் 7-6 (2), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தக் குன் வாங்கையும், ருமேனியாவின் விக்டர் கிரிவாய் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தலேஸ் துருனியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

ஆரட்டா-அருண் ஜோடி சாம்பியன்: ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜப்பானின் ஆரட்டா ஒனோஸாவா-இந்தியாவின் அருண் பிரகாஷ் ஜோடி 6-4, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.