ஹைதராபாத் போட்டியிலும் சுழற்பந்து வீச்சு முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
எனினும் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் ஆஸ்திரேலியா களமிறங்குமா என்பது குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: சேப்பாக்கம் ஆடுகளத்தைப் போன்றே ஹைதராபாத் ஆடுகளமும் உள்ளது. இந்த ஆடுகளம் முன்பாகவே தயாரிக்கப்பட்டது போன்று தெரிகிறது. மேலும் ஈரப்பதமின்றி காய்ந்துபோய் இருப்பதால் இங்கு சுழற்பந்து வீச்சு முக்கியப் பங்கு வகிக்கும். அதேபோல் பந்துகள் எகிறவும் செய்யும். இந்தப் போட்டியில் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்காவிட்டால் அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றார்.
சென்னை போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கி தோற்றதால் விமர்சனத்துக்குள்ளான கிளார்க், இந்தப் போட்டியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் ஆஸ்திரேலிய களமிறங்குமா என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக அவர் பேசுகையில், "போட்டிக்கு முன்னதாகவே மைதானத்தைப் பார்த்துவிட்டு, அதன்பிறகு தேர்வுக்குழுவினருடன் கலந்தாலோசித்து ஆடும் லெவன் அணி முடிவு செய்யப்படும்' என்றார்.
டேவிட் வார்னர் குறித்துப் பேசிய அவர், "வார்னர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம்' என்றார்.
ஹைதராபாதில்...
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இதுவரை இரு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 2010 நவம்பரில் நடைபெற்ற இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 472 ரன்கள் குவித்துள்ளது. இதுதான் இங்கு டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.
கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான மற்றொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு போட்டிகளிலுமே வேகப்பந்து வீச்சாளர்களைவிட சுழற்பந்து வீச்சாளர்களே அதிக அளவில் ஜொலித்துள்ளனர். அதனால் இந்த முறையும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் மாற்றமிருக்காது.
அதிக ரன்: இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு சதம் உள்பட 293 ரன்கள் குவித்துள்ளார். அதற்கடுத்தபடியாக சேவாக் இரு போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக விக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஓஜா 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அணி விவரம்
இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முரளி விஜய், ஷிகர் தவாண், சேதேஷ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, அசோக் திண்டா, புவனேஸ்வர் குமார்.
ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), எட் கோவன், டேவிட் வார்னர், பில் ஹியூஸ், ஷேன் வாட்சன், மேத்யூ வேட், கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜேம்ஸ் பட்டின்சன், சேவியர் டோஹெர்ட்டி, ஜாக்சன் பேர்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

