துபை டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி-பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா ஜோடி முன்னேறியுள்ளது.
துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பூபதி-லோட்ரா ஜோடி 6-4, 6-7 (2), 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பூபதி ஜோடி 6-4 என்ற கணக்கில் எளிதாக வென்றது. பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் இரு ஜோடிகளும் அபாரமாக ஆடியதால் அந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி அந்த செட்டை 7-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் டைபிரேக்கர் செட்டை பூபதி ஜோடி 10-5 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றியது.
பூபதி-லோட்ரா ஜோடி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்வீடனின் ராபெர்ட்டா வின்ஸ்டெட்-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை சந்திக்கிறது. முன்னதாக ராபெர்ட்டா-ஜிமோன்ஜிக் ஜோடி தங்களின் அரையிறுதிச் சுற்றில் 7-6 (2), 7-6 (2) என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகெய்ல் யூஸ்னி-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக் ஜோடியை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


