வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

"குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் விஜேந்தர்  மீது நடவடிக்கை'

குத்துச்சண்டை வீரர் மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று

Updated On :12 மார்ச் 2013, 1:00 am IST

குத்துச்சண்டை வீரர் மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல், விஜேந்தருடன் தங்களுக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், விஜேந்தர் இக்குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அது பஞ்சாப் போலீஸாரின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.