வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்கதேச அணி, இலங்கை அணியுடன் இருபது ஓவர் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதியது. இந்த ஆட்டம் பல்லகலே நகரில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக, அந்த அணியின் தொடக்க வீரர் பெரேரா 44 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக மெண்டிஸ் 37 ரன்களும், மேத்யூஸ் 30 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி, இலங்கை அணி பந்து வீச்சாளர்களுக்கு சவால்விடும் விதமாக விளையாடினர். இதனால், வெற்றி இலக்கான 198 ரன்களை வங்கதேச அணி எட்டி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
64 ரன்கள் எடுத்த பெரேரா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இருபது ஓவர் கோப்பையை வென்றது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தொடரை வென்றிருந்தது. அதேசமயம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

