தென் மண்டல அளவிலான அட்டயா பட்டயா போட்டியில் தமிழக ஆடவர் அணியினர் வெள்ளிக் கோப்பை வென்றனர். இப்போட்டியின் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
முதலாவது தென் மண்டல அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் புதுச்சேரி அணியுடன் மோதியது தமிழக அணி. இதில், 39-19, 36-30 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி தோல்வியைத் தழுவி வெள்ளிக் கோப்பை வென்றது. தமிழக அணியின் கேப்டன் சிவசுப்பிரமணியன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, பூடானில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், மகளிர் பிரிவு போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆந்திர அணியை தமிழக அணி எதிர்கொண்டது. இதில், 18-10, 14-8 என்ற கணக்கில் தமிழக அணி வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடியில் நலத் திட்ட உதவி! - அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் வழங்கினாா்

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் முதியவா் காயம்
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



